தமிழ் සිංහල English
Breaking News

ஆப்பிள் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய அராம்கோ நிறுவனம்!

உலகின் மிகப் பணக்கார நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் திகழ்ந்து வந்த நிலையில், உலகின் பணக்கார நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனம் தற்போது
இழந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவன என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான அராம்கோ தட்டிப்பறித்து விட்டது.
பங்கு வர்த்தகதில் முதன்முறையாக பெரும் நிதியைத் திரட்டியதன் மூலமாக அராம்கோ நிறுவனம் இந்த முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆப்பிளிள் நிறுவனத்தின் வர்த்தக முதலீடு ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிகமாக இருந்து வருகிறது, பங்கு சந்தை வரவு மூலமாக அராம்கோ நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து உலக வர்த்தக சந்தையில் அதிக சந்தை மதிப்பு மிக்க நிறுவனமாக ஆப்பிளும், இதற்கடுத்து மைக்ரோசாப்டும் இருந்தது. சந்தை வர்த்தகத்தின் வாயிலாக ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான முதலீட்டை திரட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமை ஆப்பிளுக்கு தற்போதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts