தமிழ் සිංහල English
Breaking News

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

கொழும்பில், இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ உரையாற்றியபோது, துறைசார் அமைச்சர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கடந்த கால அரசியல் செயற்பாடுகளை மக்கள் எவ்விதமாக வெறுத்தார்கள் என்பதை நாம் நன்கறிவோம். ஆகவே அவ்வாறான செயற்பாடுகளை விலக்கி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம். இலங்கை அரசியலில் ஒரு புதிய யுகத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்.

இனிவரும் நாட்களில் உங்களுக்கு ஒதுகப்பட்டுள்ள துறைகளில், உங்களது அதியுட்ச திறமைகளை பயன்படுத்தி மக்களுக்கு வாக்குறுதியளித்த விடயங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம். இதற்கான உங்களுடைய ஒத்துழைப்பினை முழுமையாகத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Share this post:

Recent Posts