தமிழ் සිංහල English
Breaking News

தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா.!

“கொள்கை பிரகடனத்தினை தெளிவுப்படுத்தி மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதவர்கள், இன்று என் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள். இவ்வாறான அரசியல் கலாசாரத்தினை முழுமையாக இல்லாதொழிப்பேன்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தினை எவ்வாறு முன்னேற்றுவது தொடர்பான கொள்கை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே எனது தேர்தல் பிரச்சாரங்கள் காணப்படுகின்றது. ஆனால் ஆளும் தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை பிறரை குறிப்பாக என்னை விமர்சித்தே தேர்தல் பிரச்சாங்களை முன்னெடுக்கின்றார்கள். அபிவிருத்தி தொடர்பான கொள்கை திட்டங்களை இதுவரையில் மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தவில்லை. நாட்டில் தவறான அரசியல் கலாசாரங்களே காணப்படுகின்றது. இந்த கலாசாரம் முழுமையாக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றிமைக்கப்படும். ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம்- தம்புத்தேகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Share this post:

Recent Posts