தமிழ் සිංහල English
Breaking News

சஜித்தின் மன்னார் பிரசார கூட்ட மேடையில் மனோ-ரிசாட் முறுகல்?

மன்னாரில் இன்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, அமைச்சர்கள் மனோ கணேசன், ரிசாத்  பதூதீன் ஆகியோரது  அணியினர் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

மன்னார் பிரசார கூட்ட ஏற்பாட்டுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் ரிசாட் பதூதீனின் சகோதரர் ரிஸ்கான் பதூதீனுக்கும், அமைச்சர் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணி/தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்திக்கும் இடையிலேயே முறுகல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

நேற்றிரவிலிருந்து மன்னார் கூட்டம் தொடர்பில் பதாகைகள் அமைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற விடயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து, மேடையில் ஜனகன் விநாயகமூர்த்திக்கு அமர இடம் ஒதுக்க முடியாது என அமைச்சர் ரிசாட் அணியினர் மறுத்ததை அடுத்து மேடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

தமது உரையில் அமைச்சர் மனோ கணேசன், சஜித்துக்கு ஆதரவளித்தமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றியும்,  பாராட்டையும் தெரிவித்தார். தம்மால் ஏறுபாடு செய்யப்பட்ட மேடையில் அமைச்சர் மனோ கூட்டமைப்பை சிலாகித்து பேசியமையும், அமைச்சர் ரிசாட் பதூதீனின் அணியினரை அதிருப்திக்கு  உள்ளாக்கியதாகவும் கூட்ட மேடையில் இருந்தோர் மூலம் தெரிய வருகிறது.

Share this post:

Recent Posts