தமிழ் සිංහල English
Breaking News

16 மாவட்டங்களில், 119 தொகுதிகளில் கோத்தாவின் வெற்றி உறுதி – என்கிறார் டலஸ்

வரும் அதிபர் தேர்தலில் 16 மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று, அவரது ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வியத்மக செயலகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் கோத்தாபய ராஜபக்சவே வெற்றி பெறுவார்.

கோத்தாபய ராஜபக்ச வெற்றிபெறும் 13 மாவட்டங்களில்,  சஜித் பிரேமதாசவுக்கு ஒரு தேர்தல் தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது.

மொத்தமுள்ள 160 தேர்தல் தொகுதிகளில், 119 தேர்தல் தொகுதிகளில் கோத்தாபய ராஜபக்சவுக்கு வெற்றி கிடைக்கும்.

9 தேர்தல் தொகுதிகளில் கடுமையான போட்டியால், இழுபறி நிலை காணப்படும்.

கடந்த அதிபர் தேர்தலில், அன்னம் சின்னத்துக்கு 90 தேர்தல் தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.

இம்முறை, 119 தொகுதிகளில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என்பதால், அவர்  வெற்றி பெறுவது உறுதி” என்றும் அவர் கூறினார்.

Share this post:

Recent Posts