தமிழ் සිංහල English
Breaking News

நாட்டிற்கு ஒரு வலிமையான தலைவர் கோட்டாபய .!

நாட்டிற்கு ஒரு வலிமையான தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்களே ஆவார். ஆகையால் தான் நாம் அனைவரும் ஒன்றினைந்து நாம் இந்த நாட்டிற்கு ஒரு வலிமையான
தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் நோக்கில் எதிர்வரும் 16ம் திகதி
இடம்பெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி தேர்தலில்
ஆதரவு வழங்கும் நோக்கில் 05.11 .2019.செவ்வாய்கிழமை மஸ்கெலியா பிரவுன்லோ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நமது நாட்டின் முதுகெலும்பாக
விளங்குகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு நாம் தீர்வினை பெற்று கொடுத்தல், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் எதிர்கால திட்டம்,
மலையகத்தில் படித்த இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பு போன்ற
வேலைத்திட்டங்களை நாம் நிறைவேற்றி கொள்ளமுடியும்.

இலங்கை தொழிலாளர் காங்ரஸ் எமது ஜனாதிபதி வேட்பாளரிடம் 32 அம்ச கோரிக்கையினை முன் வைத்துள்ளது. நாங்கள் முன் வைத்த கோரிக்கைகள் தேர்தல் விஞ்ஞாபானத்தில் உள்வாங்கபட்டுள்ளது.

எமது வேட்பாளருக்கு மலையகத்தில்
மாத்திரம் அல்ல நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் ஆதரவு அலைபோல் பெருகிகொண்டு வருகிறது.

எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள்
வெற்றி பெற்றவுடன் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் மலையக இளைஞர் யுவதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இ. தொ. கா. தீர்வினை பெற்றுகொடுக்கும்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ
அவர்களுக்கு மலையக மக்கள் வாக்களித்து அவரின் கரங்களை பலபடுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.

Share this post:

Recent Posts