தமிழ் සිංහල English
Breaking News

ஹாலிவுட் நடிகையின் ஆடை ரூ.2¾ கோடி ஏலம்.!

ஹாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஒலிவியா நியூட்டன் ஜான் (வயது 71). இவர் நடித்து, 1978-ம் ஆண்டு வெளியான ‘கிரீஸ்’ என்ற திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இசை மற்றும் காதலை கதைக்களமாக கொண்ட இந்த திரைப்படத்துக்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ஒலிவியா நியூட்டன் ஜான் கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு சிற சட்டையை அணிந்து நடித்திருப்பார். இந்த ஆடை மிகவும் பிரபலமானது.

இந்த நிலையில், மார்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் ஒலிவியா நியூட்டன் ஜான், தன்னை போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஒலிவியா நியூட்டன் ஜான், தான் பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்ட சில பொருட்களை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஏல நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விட்டார்.

அப்போது, ‘கிரீஸ்’ திரைப்படத்துக்காக பயன்படுத்திய கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு சிற சட்டை 4 லட்சத்து 5 ஆயிரத்து 700 அமெரிக்க டாலருக்கு (ரூ.2 கோடியே 86 லட்சத்து 67 ஆயிரம்) ஏலம் போனது. இந்த தொகை எதிர்பார்க்கப்பட்டதை விட 2 மடங்கு அதிகம் என ஏல நிறுவனம் கூறியது.

Share this post:

Recent Posts