தமிழ் සිංහල English
Breaking News

கூட்டமைப்புடனான சந்திப்பை விக்னேஸ்வரன், சுரேஷ் புறக்கணிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் கூடவிருந்த நிலையில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற போது, இன்று கூடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

எனினும், பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஒன்றிணைந்த ஐந்து தமிழ் கட்சிகளும் தீர்மானமொன்றுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு கலந்துரையாடல் மற்றும் புதிய தீர்மானங்கள் தேவையில்லை என்பதால், இன்று நடைபெறும் கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்ததாக சி.வி.விக்னேஸ்வரனும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளனர்.

Share this post:

Recent Posts