தமிழ் සිංහල English
Breaking News

ஊடக சுதந்திரத்தை மிகவும் சிறப்பாக பாதுகாத்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே.!

இதுவரை இருந்த அரசாங்கங்களை விட ஊடக சுதந்திரத்தை மிகவும் சிறப்பாக பாதுகாத்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘உயிரை பறிக்கும் அரசாங்கத்தை தெரிவு செய்வதா? அல்லது உயிரை காப்பாற்றும் அரசாங்கத்தை தெரிவு செய்வதா? என பொதுமக்கள் தீர்மானிக்க வேண்டும்.

சிறுபான்மை அதிகாரத்தை கொண்ட அரசாங்கமாக இருந்த போதிலும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றி சுயாதீன ஆணைக்குழுவை உருவாக்கவும், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்தமையை மிகப்பெரிய சாதனையாக கருதுகின்றேன்.

இதன் காரணமாக சுதந்திரமான சமுதாயத்தை உருவாக்க முடிந்தது’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share this post:

Recent Posts