தமிழ் සිංහල English
Breaking News

மலையக மக்கள் மடையர்கள் அல்ல .!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் அடிப்படை வேதனம் வழங்கப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறி இருப்பது, நடைமுறை சாத்தியமற்றது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

900 ரூபாவாக இருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களது வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறி இருந்தார்.

இதனை அடுத்தே சஜித் பிரேமதாச அதனை 1500 ரூபாவாக அதிகரிப்பதாக கூறி இருந்தார்.

இதற்கு முதலாளிமார் சம்மேளனம் ஒத்துக்கொள்ளுமா? என்பது தொடர்பில் அவர் ஆராயவில்லை.

எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் சஜித் அவ்வாறு அறிவித்திருக்கிறார் என்று டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

Share this post:

Recent Posts