தமிழ் සිංහල English
Breaking News

எல்லை கடந்த தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கிறது-

இந்தியாவும்-பாகிஸ்தானும் நேரடியாகப் பேச்சு நடத்துவதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, எல்லை கடந்த பயங்கரவாதத்தை அரங்கேற்றும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதே இந்த பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ளது எனக் கூறியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற குழு, தெற்காசியாவில் மனித உரிமைகள் குறித்து நாளை விசாரணை நடத்த உள்ள நிலையில், வெளியுறவுத்துறையின் கருத்துகளை, உயரதிகாரி ஆலிஸ் வெல்ஸ் அறிக்கையாக முன்வைத்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே, 2006-2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் பின்புலப் பேச்சுவார்த்தைகள் மூலம் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் ஆலிஸ் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். எல்லை கடந்த தீவிரவாதத்தை அரங்கேற்றும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதே இந்த பேச்சுவார்த்தைக்கு பெரும் தடையாக உள்ளது என்றும் ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆதுரவு தீவிரவாத இயக்கங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அரங்கேற்றும் வன்முறை சீர்குலைவுக்கு வழிவகுக்கிறது என்றும் கூறியுள்ள ஆலிஸ் வெல்ஸ், பாகிஸ்தான் தனது செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என எச்சரித்துள்ளார்.

Share this post:

Recent Posts