தமிழ் සිංහල English
Breaking News

நாட்டின் தேசியப் பாதுகாப்பை மஹிந்த ராஜபக்ஷ யுகத்தின் மூலமே மீண்டும் உறுதிப்படுத்த முடியும்..!

நாட்டின் தேசியப் பாதுகாப்பை ராஜபக்ஷ யுகத்தால் மாத்திரமே மீண்டும் உறுதிப்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மித்தெனிய பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “உயர்தரம் கற்கும் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகளை நாம் உருவாக்குவோம். அறிவுடைய சமூகம், கல்வி வளமிக்க நாட்டை உருவாக்கி எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை வலுப்படுத்தும் விதத்தில் இதற்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் எமது நாட்டின் புலனாய்வுத்துறையின் அனைத்து ரகசியங்களும், வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டு புலனாய்வுத் துறையினருக்கும் தெரியவந்துள்ளது. இத்தாக்குதல்கள் அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது. இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பை மஹிந்த ராஜபக்ஷ யுகத்தின் மூலமே மீண்டும் உறுதிப்படுத்த முடியும். அதற்கான தகுதியும், பலமும் எம்மிடமே உள்ளன. சிறந்த நிர்வாகத்திறனை கொண்ட குழு எம்மிடம்தான் உள்ளது.” என்றுள்ளார்.

Share this post:

Recent Posts