தமிழ் සිංහල English
Breaking News

ஹக்கீமை தூற்றிய தூற்றல் இன்னும் காயவில்லை …!

கிழக்கு மாகாண அட்டாளைச்சேனையின் முன்னாள் அமைச்சர் M.S. உதுமாலெப்பை இன்று காலை ஹக்கீம் கட்சியில் உத்தியோகபூர்வமாக ஹக்கீம் முன்னிலையில் இணைகின்றார் என அரசியல் கட்டுரையாளர் எம்.எம்.நிலாம்டீன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று கல்முனை ஜெமீல் முன்னாள் MPC ஹக்கீம் முன்னிலையில் இணைகின்றார்!

ஜெமீல் அமைச்சர் ரிசார்ட் கட்சியில் இணைந்து தன்மீது இருந்த கடன் சுமைகளை இறக்கி விட்டு மீண்டும் ஆப்பேசு தாய் வீட்டுக்கு வருகின்றார்.

கடந்த 19 ஆண்டுகளாக அக்கரைப்பற்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சியில் உதுமாலெப்பை இணைந்து கொண்டு அட்டாளைச்சேனையில் ஹக்கீம் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக மிக அதிகமான பொலிஸ் முறைப்பாடு – கைது – சிறை என்று நாசகார செயல்களில் ஈடுபட்டு அட்டாளைச்சேனையில் ஹக்கீம் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மிகவும் வெறுக்கப்பட்ட ஒருவர்தான் உதுமாலெப்பை.

உதுமாலெப்பையினால் அரங்கேற்றம் செய்யப்பட்ட பல போலியான வழக்குகளில் சிக்குப்பட்ட பலர் இன்னும் வழக்கு கோடு என்று அலைந்து கொண்டிருக்கின்றாகள் .

இந்த நிலையில்தான் இன்று காலை கொழும்பில் ஹக்கீம் கட்சியில் உத்தியோகபூர்வமாக ஹக்கீம் முன்னிலையில் இணைகின்றார்.

ஆனால் உதுமாலெப்பை ஹக்கீம் கட்சியில் இணைவதை அட்டாளைச்சேனையில் ஆரம்பகால SLMC ஆதரவாளர்கள் ஒரு போதும் விரும்பவில்லை .

ஆனால் நிந்தவூர் பைசல் காசிம் MP கல்முனை ஹரீஸ் MP சம்மாந்துறை மன்சூர் MP ஆகியோர் உதுமாலெப்பையை ஹக்கீம் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு கடந்த 4 மாதங்களாக பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு இன்று வெற்றி என்னும் அறுவடை காண்கின்றாகள்.

அட்டாளைச்சேனை இலவச MP நசீரின் வளர்ச்சிக்கு எதிராக உதுமாலெப்பையைக் கொண்டு குழி பறிக்க வெட்டுக் குத்து செய்ய இந்த அறுவடை வெற்றி என்று சொல்லலாம்.

ஆனால் குறிப்பாக நிந்தவூர் பைசல் காசிம் MP உதுமாலெப்பையைக் கொண்டு வெட்டிய குழிக்குள் அடுத்த வருடம் மே மாதம் கடந்து விழுவார் / தோல்வி காணுவார் என்பது ஆரூடம்.

இந்தக் கேவலம் கெட்ட அரசியலுக்காக அதாவுல்லாவை மகிழ்விக்க சொந்த ஊரவன் என்றும் பார்க்காமல் உதுமாலெப்பை அட்டாளைச்சேனையில் பொலிஸ் துணையோடு காட்டிய கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதாவுல்லாஹ் உதுமாலெப்பைக்கு போட்ட மாகாண அமைச்சர் என்ற பிச்சைப் பதவி மூலமாக தனக்கு கிடைத்த அத்தனை வீதி கட்டிடம் மற்றும் ஏனைய கொந்தராத்துக் களையும் கிண்ணியாவில் கமிசன் கொந்தராத்துக் காரர்களுக்கு கொடுத்து நல்ல பணம் பார்த்தார்.

ஆனால் உழைத்த அத்தனை பணமும் அதாவுல்லாவுக்காக/கட்சிக்காக செலவு செய்து இப்போது வீசிய கையும் வெறும் கையோடு உதுமாலெப்பை உள்ளார்.

அதாவது உதுமாலெப்பை 1987 ஆம் ஆண்டுவாக்கில் இருந்த நிலை .அதாவது சீரோ 0 நிலை. ஹக்கீம் யாருக்கும் பணம் கொடுப்பதில்லை .

ஹக்கீம் கட்சிக்குள் வர விரும்புவோர் தங்கள் சொந்தப் பணம் கொண்டு சகல செலவும் செய்ய வேண்டும் .

அந்த வகையில் உதுமாலெப்பை இனிமேல் சீரோ நிலயில் இருந்து சொந்தப் பணம் கொண்டு சகல செலவுகளும் செய்து அரசியலில் எழும்ப வேண்டும்.. இது கொஞ்சம் கஷ்டமான பயணம் .பாலைவனப் பயணம் ….

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாண தேர்தலில் செலவு இன்றி சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நோக்கில் இன்று காலை ஹக்கீம் கட்சியில் உத்தியோகபூர்வமாக உதுமாலெப்பை தனது பரிவாலங்களோடு ஹக்கீம் முன்னிலையில் இணைகின்றார்!.

நேற்று வரைக்கும் ஹக்கீமை தூற்றிய தூற்றல் இன்னும் காயவில்லை ..

சே என்ன மானங்கெட்ட அரசியல்டா!..

ஆனாலும் உதுமாலெப்பை ஏன் இந்த அவசரம்? ஜனாதிபதி தேர்தல் முடிந்து தனது முடிவை எடுத்திருக்கலாம் .

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாண தேர்தலுக்காக இந்த முந்திரிக்கொட்டை பாய்ச்சல் தேவையா ?

இன்றுடன் உதுமாலெப்பையின் அரசியல் ஒரு அஸ்தமனத்தை நோக்கிய பயணமாக அமையும்!

கிண்ணியாவில் ஒரு உள்ளூர் முந்திரிக்கொட்டை அரசியல்வாதி ஹக்கீம் கட்சியில் இணைந்து முகவரி இல்லாமல் மூழ்கி விட்டது./ தொலைந்து விட்டது ..

அட்டாளைச்சேனையின் உதுமாலெப்பை என்னும் மாகாண அரசியல்வாதி முகவரி இல்லாமல் மூழ்கிவிடப் போகுது…

ஹக்கீம் கட்சிக்குள் உதுமாலெப்பை மாகாண தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்பதை அடுத்த ஆண்டில் பார்ப்போம்…

Share this post:

Recent Posts