தமிழ் සිංහල English
Breaking News

தாம் ஆட்சியை பொறுப்பேற்பது அரசியல் பழிவாங்கல்களுக்காக அல்ல..!

தமது பொருளாதார திட்டங்கள் மக்களுக்கு சார்பானது என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமது திட்டங்கள் அனைத்தும் யதார்த்தமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பொருளாதார ஸ்த்தீரத்தன்மை ஒன்று பேணப்படாததன் காரணமாக நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டார்கள் முதலீடுகளை மேற்கொள்வதை தவிர்த்திருக்கிறார்கள்.

முறையான பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்று இல்லாமை காரணமாக நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சகல துறைகளும் தற்போதைய ஆட்சியில் வீழ்ச்சி போக்கை சந்தித்துள்ளது.

ஆகவே சிறந்த பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்தி சுற்றுலாத்துறையை மறுமலர்ச்சியடைய செய்து பல்வேறு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அதேநேரம் இராணுவத்தினருக்கான கௌரவத்தை வழங்கி நாட்டின் புலனாய்வுத்துறையையும் தான் கட்டியெழுப்பவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, அதிகாரத்தை தாம் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பது பழிவாங்கலுக்காக அல்லவென தெரிவித்தார்.

கடந்த நான்கு வருடங்களாக பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

மக்களிடம் அன்றாட வாழ்க்கை செலவீனங்களுக்கே பணம் இல்லாது போயுள்ளது.

வர்த்தகர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தங்களின் சொத்துக்களை விற்றும் அடகு வைத்தும் கஷ்டங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

தாம் மட்டுமல்லாது அரசியல் அரசிங்கில் பல்வேறு தரப்பினர் தற்போதைய அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

ஆகவே தாம் ஆட்சியை பொறுப்பேற்பது அரசியல் பழிவாங்கல்களுக்காக அல்ல.

மக்களுக்கான சிறந்த சேவையை வழங்குவதற்காகும் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

Share this post:

Recent Posts