தமிழ் සිංහල English
Breaking News

1அந்த முதல் காதல் 15 வயதில் வந்தது. !!

தமிழில் தாம் தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முதல் காதல் அனுபவங்கள் குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:- “எனக்கு புரியாத வயதில் ஆசிரியர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த முதல் காதல் 15 வயதில் வந்தது. 17 வயதில் சண்டிகாரில் இருந்தோம். எனது தோழி ஒரு பையனை விரும்பினாள். அவனுடைய நண்பனும் நானும் அவர்களுக்காக காத்திருக்க நேர்ந்தது. அப்போது அந்த நண்பனை காதலிப்பதாக சொன்னேன். அவனோ என்னை பார்த்து நீ ரொம்ப சின்ன பொண்ணு என்று கூறினான்.

எனக்கு இதயமே வெடித்த மாதிரி ஆகி விட்டது. ஒரு வாய்ப்பு கொடு நான் வளர்ந்த பிறகு வருகிறேன் என்றேன். அடிக்கடி செல்போனில் தகவலும் அனுப்பினேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் சில நாட்கள் சுற்றி விட்டு பிரிந்து விட்டோம். எனக்கு முத்தம் கொடுப்பது எப்படி என்பது கூட அப்போது சரியாக தெரியவில்லை. அவனுக்கு முத்தம் கொடுக்க நினைத்து எனது உள்ளங்கையில் முத்தம் கொடுத்து பயிற்சி எடுத்தேன். வயது குறைவு என்பதால் காதலில் சரியான புரிதல் இல்லாமல் இருந்தது என கங்கனா ரணாவத் கூறினார்.

Share this post:

Recent Posts