தமிழ் සිංහල English
Breaking News

முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்.!

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் வியாழக்கிழமை,  யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.

இதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது.

இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர்.

இவர்களை வரவேற்கும் நிகழ்வில்சிறிலங்கா அதிபரும், பிரதமரும் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டதும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வாரத்தில் மூன்று சேவைகளை நடத்தவுள்ளதாக அலையன்ஸ் எயர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

Share this post:

Recent Posts