தமிழ் සිංහල English
Breaking News

சட்டம் சாதாரண மக்கள் மீது மாத்திரமே பாய்கின்றது.!

தற்போது நாட்டிலிருக்கும் சட்டம் சாதாரண மக்கள் மீது மாத்திரமே பாய்வதாகவும், இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் சகலரும் சட்டத்தை மீறியே செயற்பாட்டுள்ளனர் என்றும் தேசிய மக்கள் சக்தியின் (மக்கள் விடுதலை முன்னணி) ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாயநாயக்க தெரிவித்துள்ளார்.

தலவத்துகொடவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தற்போது நாட்டிலிருக்கும் சட்டம் சாதாரண மக்கள் மீது மாத்திரமே பாய்கின்றது. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் சகலரும் சட்டத்தை மீறியே செயற்பாட்டுள்ளனர். அதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்களிலிருந்து குற்றச்செயல்கள், மோசடிகள் தொடர்பான விடயங்கள் பல நழுவச் செய்யப்படுகின்றன. சகல விதமான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவகங்களிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தப்பிகொள்கின்றனர்.

நாட்டில் வலுவாக பொலிஸ் கட்டமைப்பொன்று காணப்பட்டாலும், அவர்களால் கண்டறிய முடியாத அளவிலான குற்றச்சாட்டுக்களை அரசாங்கங்களே செய்துள்ளன. அதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுனவங்களை தரமாக சீரமைக்க வேண்டும்.

இன்றளவில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அதிகளவில் பேசப்பட்டாலும் நாட்டில் காணப்படும் பாதுகாப்பற்ற தன்மையை கருத்தில் கொண்டுதான் பாதுகாப்பு கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.

அவ்வாறிருக்க யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது, தமக்கான சுயஆட்சிகொண்ட பிரதேச, தரைப்படை, விமானப்படை, கடற்படை என்பவற்றுடன் இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள கூடிய வகையிலான இராணுவ கட்டமைப்பாக உருவெடுத்திருந்தது.

மேற்படி அமைப்பொன்று மீண்டும் இலங்கையில் உருவாகுவதற்கான எந்தவொரு சாத்தியமும் இல்லை. வடக்கில் தொடர்ச்சியா யுத்தம் இருக்கும் என்றும், வடக்கிலுள்ள தாய்மார்கள் யுத்தத்துக்காகவே தமது பிள்ளைகளை ஆளாக்குகிறார்கள் என்றும் தவறானதொரு எண்ணக்கரு தெற்கிலுள்ள மக்கள் மத்தியில் பரப்படுகின்றது.” என்றுள்ளார்.

Share this post:

Recent Posts