தமிழ் සිංහල English
Breaking News

“உலகில் சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குவேன்..!

அடியாட்களையும் உதவியாட்களையும் வைத்து நாட்டை நிர்வகிக்க முடியாது என்று புதிய ஜனநாயக முன்னணியின் (ஐக்கிய தேசிய முன்னணி) ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “உலகில் சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குவேன். அடியாட்களையும் உதவியாட்களையும் வைத்து நாட்டை நிர்வகிக்க முடியாது. மக்கள் மத்தியில் சென்று அவர்களின் மனங்களை வென்று சேவையாற்றும் திறமை எமக்கு உண்டு. நாட்டை இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா அல்லது சிநேகப்பூர்வ நாட்டினை உருவாக்குவதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

Share this post:

Recent Posts