தமிழ் සිංහල English
Breaking News

பொதுஜன பெரமுன – சுதந்திரக் கட்சி புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்து

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இன்று முற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சிறிலங்கா பவுண்டேசன் இன்ஸ்ரிரியூட்டில் இன்று முற்பகல் நடந்த நிகழ்வில், சுதந்திரக் கட்சியின் சார்பில், அதன் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும், பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் செயலாளர் சாகர காரியவசமும், இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கமைய, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல், மற்றும மாகாண சபைத் தேர்தல்களில் இரண்டு கட்சிகளும், இணைந்து சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என்ற பெயரில் , நாற்காலி சின்னத்தில் போட்டியிட இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

Share this post:

Recent Posts