தமிழ் සිංහල English
Breaking News

ராஜபக்ஷ’ குடும்பத்தைப் பாதுகாக்கும் ஜனாதிபதி தேவையில்லை:.!

‘ராஜபக்ஷ’ குடும்பத்தை பாதுகாக்கும் ஜனாதிபதி ஒருவருக்கு பதிலாக நாட்டை பாதுகாக்கும் ஜனாதிபதி ஒருவரையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஹொரணை, மொறகஹஹேன பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டுக்கு தலைவர் ஒருவர் தேவை. ஆனால் குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை. அதனால் அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும். அவர் கமினியூஸ்ட்வாதி ஒருவரின் குணாம்சங்களுடன் நாட்டை வழிநடத்துவார்.” என்றுள்ளார்.

Share this post:

Recent Posts