தமிழ் සිංහල English
Breaking News

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை.!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது திரையுலகில் பல்வேறு சமயங்களில் நடக்கிறது. அதுபற்றி நடிகை தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட பல நடிகைகள் பகிரங்கமாக பேட்டி அளித்ததுடன் போலீசில் புகாரும் அளித்தனர். தற்போது மற்றொரு நடிகை, 2 இயக்குனர்கள் மீது பாலியல் தொல்லை புகார் கூறியிருக்கிறார். போஸ்டர் பாய்ஸ், நாம் சபானா, பாஸார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பல இந்தி படங்களில் நடித்திருப்பதுடன் தமிழில், பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்திருப்பவர் எல்லி அவ்ராம். சுவீடன் நாட்டை சேர்ந்த இவர் மும்பையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார். அவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லை பற்றி கூறியதாவது: எனது திரையுலக ஆரம்ப நாட்களில் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு 2 இயக்குனர்களை நான் நேரில் சந்தித்தேன்.

அவர்கள் என்னுடைய கையை பிடித்து குலுக்கிக்கொண்டே ஒற்றை விரலால் என் உள்ளங்கையில் கீறிக்கொண்டே எதையோ உணர்த்தினார்கள். எனக்கு புரியவில்லை. எனது நண்பரிடம் இயக்குனர்களின் சைகை பற்றி கூறினேன். அவர் அதிர்ச்சி அடைந்து, அந்த இயக்குனர் அப்படியா செய்தார்? அப்படிசெய்ததற்கு என்ன அர்த்தம் என்று உனக்கு தெரியுமா? என்றார்.

எனக்கு தெரியவில்லை என்றதும் அவர்கள் இருவரும் உன்னை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். அதற்காகத் தான் உள்ளங்கையில் விரலால் சீண்டி சிக்னல் கொடுத்திருக்கிறார்கள் என்றார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்களின் பெயர்களை கூற நடிகை எல்லி அவ்ராம் மறுத்துவிட்டார்.

Share this post:

Recent Posts