தமிழ் සිංහල English
Breaking News

அரசியல் சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் முதலாவது பரப்புரைக்கூட்டம் இன்று (புதன்கிழமை) அநுராதபுரத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுப்பதற்காக அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுத்த அனைத்து சூழ்ச்சிகளையும் நீதித்துறையின் ஊடாகவே தோற்கடித்துள்ளோம்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு அனைத்து தகுதிகளும் காணப்படுகின்றது. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கே இனி மக்களின் ஆதரவை பெற முடியாது.

மக்களுக்கு சேவையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியதிகாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து தகைமைகளும் காணப்படுகின்றன.

இனி எவ்வித தடைகளும் கிடையாது. வெற்றிப்பெறுவதே இறுதியாக காணப்படுகின்றது. நாடு தழுவிய ரீதியில் அனைத்து செயற்திட்டங்களையும் இன்று முதல் முன்னெடுத்து செல்வோம்” என அவர் இதன்போது தெரிவித்தார்.

Share this post:

Recent Posts