தமிழ் සිංහල English
Breaking News

அனுராதபுர சல்காடோ மைதானத்தில் கோத்தாபய ராஜபக்சவின் முதலாவது அதிபர் தேர்தல் பரப்புரைக் கூட்டம்.!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரையை இன்று அனுராதபுரவில் ஆரம்பிக்கவுள்ளார்.

அனுராதபுர சல்காடோ மைதானத்தில் கோத்தாபய ராஜபக்சவின் முதலாவது அதிபர் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும்.

இதில் மகிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுன மற்றும் பங்காளிக் கட்சித் தலைவர்கள், பங்கேற்கின்றனர்.

இந்த தேர்தல் மேடையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பல பிரதிநிதிகளும் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதையடுத்து, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் தொகுதி மட்டத்தில் 138 பரப்புரைக் கூட்டங்களிலும், 26 மாவட்ட மட்டத்திலான கூட்டங்களிலும், கோத்தாபய ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.

Share this post:

Recent Posts