தமிழ் සිංහල English
Breaking News

புதிய மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுப்பட வேண்டும். .!

தேச பற்றுள்ளவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 71 வருட கால அரசியல் எத்தன்மை வாய்ந்தது என்பதை  புதியதாக  விமர்சனத்திற்குட்படுத்த வேண்டியதில்லை. புதிய மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுப்பட வேண்டும். தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள்  இராணுவ தளபதியுமான ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

71 வருட கால அரசியலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும்.  பழமையான அரசியல் நிலைமைகள் எத்தன்மை வாய்ந்தது என்பதை நாட்டு மக்கள் அனுபவ ரீதியில் உணர்ந்துள்ளார்கள்.

நாடு எதிர்க் கொண்டுள்ள நிலைமையினை கருத்திற் கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளேன். நாட்டின்  நிகழ்கால மற்றும் எதிர்கால இருப்பு தொடர்பில்  அக்கறை கொண்டுள்ள அனைவரும் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Share this post:

Recent Posts