தமிழ் සිංහල English
Breaking News

போட்டியில் இருந்து விலகினார் குமார வெல்கம

சிறிலங்கா அதிபர் தேர்தலில்  சுயேட்சையாகப் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக குமார வெல்கம இன்று தேர்தல்கள் செயலகத்துக்கு வரவில்லை.

இந்த நிலையில் குமார வெல்கமவின் பேச்சாளரான சட்டவாளர் ராஜித் கொடிதுவக்கு தேர்தல்கள் செயலகத்துக்கு முன்பாக, ஊடகவியலாளர்களிடம் பேசிய போது, குமார் வெல்கம அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும், அவரது சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

Share this post:

Recent Posts