தமிழ் සිංහල English
Breaking News

தேசிய காங்கிரஸ் கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு.!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு பூரண ஆதரவினை வழங்குவதாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய தலைமையிலான குழுவினருக்கும், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் அவர்களின் தலைமையிலான அணியினருக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பாக முழு ஆதரவினை வழங்குவதாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ச அவர்களும், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் இவர்களுடன் பொதுஜன பெரமுனையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரு கட்சிகளினதும்  முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Share this post:

Recent Posts