தமிழ் සිංහල English
Breaking News

கோட்டாபயவின் வாழ்வில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

கோட்டபாய ராஜபக்சவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் இலங்கை பிரஜை தான் என்பதை உறுதி செய்தது .அதேநேரம் மனுவை தள்ளுபடி செய்து, நீதிமன்றம் ஏகமனதாக இந்த முடிவை அறிவித்தது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி சற்று முன்னர் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே தற்போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் இன்றுடன் மூன்று நாட்களாக தொடர்ந்து இடம்பெற்றுவந்த இந்த வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தள்ளுபடி செய்தது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிடுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts