தமிழ் සිංහල English
Breaking News

கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்கவில்லை.!

தம்மை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், எவரிடம் இருந்தும் ஆதரவைப் பெறுவதற்காக நிபந்தனைகளுக்கு இணங்கப் போவதில்லை என்றும் என்றும்  ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போதைய நிலவரங்கள் குறித்தே பேசப்பட்டது, அரசியல் விடயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை.

சிறிலங்கா அதிபருடன் எந்த சிறப்பாக விடயம் குறித்தும் கலந்துரையாடப்படவில்லை சிறிலங்கா அதிபருடன் சிறப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான தேவை இல்லை” என்று தெரிவித்தார்.

அப்போது, ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா அதிபர் ஆதரவளிக்க முன்வந்தால், அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்று சஜித் பிரேமதாசவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், எனது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் எவரது ஆதரவையும் வரவேற்கிறேன். என்று பதிலளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதாவது நிபந்தனைகளை போட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச, எந்த நிபந்தனைகளும் இல்லை, நிபந்தனைகளுக்கு அடி பணியும் நபர் நான் அல்ல என்று முன்னரே தெளிவாக கூறியிருக்கிறேன், மற்ற கட்சிகளுடன் கொள்கை ரீதியான உடன்பாடுகள் மட்டுமே உள்ளன, நிபந்தனைகள் இல்லை” என்று கூறினார்.

Share this post:

Recent Posts