தமிழ் සිංහල English
Breaking News

அனைவருக்குமான தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்த்துள்ளேன்:

நாட்டு மக்கள் அனைவருக்குமான தலைமைத்துவத்தை வழங்க தான் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர், ஜனாதிபதியாக எனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் அனைத்து கொடுப்பனவுகளையும் நாட்டு மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக நன்கொடையாக வழங்கி ஒரு வலிமையான பொது வாழ்வை அனைத்து மக்களுக்கும் பெற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறேன். பொதுமக்களின் துன்பங்களை நன்கு அறிந்த பின்னரும், அவர்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்வினை ஆட்சியாளர்கள் நடத்துகின்றனர்.” என்றுள்ளார்.

Share this post:

Recent Posts