இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதனை இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாசவிற்கா அல்லது கோதபாய ராஜபக்சவிற்கா ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கட்சிக்குள் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென கட்சியின் உறுப்பினர்கள் கோரி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் 32 பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரு தரப்புடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.