தமிழ் සිංහල English
Breaking News

போர்க்குற்றவாளிகளை தண்டிப்போம்.!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு பணம் கொடுத்ததை ஒரு போர்க்குற்றமாகவே கருத வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவவில் நேற்று நடந்த ஐதேக கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“முன்னைய ஆட்சிக்காலத்தில், புலனாய்வுப் பிரிவுகளால் ஊதியம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்களால் தான், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு பணம் கொடுத்தது ஒரு போர்க்குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

வரும் நொவம்பரில் மீண்டும் அரசாங்கத்தை அமைத்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு பணம் கொடுத்ததை ஒரு போர்க்குற்றமாக கருதி, பணம் கொடுத்தவர்களை நாங்கள் தண்டிப்போம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Share this post:

Recent Posts