தமிழ் සිංහල English
Breaking News

தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வன்னி படைத் தலைமையகத்திற்கு விஜயம்.!

வடக்கில் ஆனையிறவு மற்றும் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினரின் சோதனைச் சாவடிகள் மீண்டும் அமைக்கப்பட்டு வரும் நிலையில் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வன்னி படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வன்னி தலைமையகத்திற்குச் சென்ற படைத் தளபதியை வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன வரவேற்றார். பின்னர் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.

படைத் தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்குச் சென்ற படைத்தளபதி, உயிரிழந்த படையினரின் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பின்பு படைத் தளபதிகள், பாதுகாப்பு முன்னரங்க பராமரிப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர் மத்தியில் இராணுவ கடமைகள் குறித்து உரையினை மேற்கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ள நிலையில், இராணுவத் தளபதியின் வன்னி விஜயம் உள்நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு படைத்தரப்பின் உதவி பெறப்படலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Share this post:

Recent Posts