தமிழ் සිංහල English
Breaking News

சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயம்.!

தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் ஒற்றுமை எத்தகையது என கண்டுக்கொள்ள முடியும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயம் என கூறிய அவர் ஒக்டோபர் மூன்றாம் திகதி கோட்டாபயவுக்கு தேர்தலில் போட்டியிட முடியுமா? இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் எனவும் கூறினார்.

கோட்டாபயவுக்கு பயந்தா தேர்தல் நேருங்கும் போது இவ்வாறான வழக்குகளை தாக்கல் செய்கின்றீர்கள் என ஊடாகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், எந்தவித பயமும் இல்லை தேர்தல் நெருங்கும் போது இவ்வாறான வழக்குகளுக்கு பெறுமதி அதிகம் என கூறினார்.

நீதிமன்றத்தின் முடிவு இறுதியானது எனவும், அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறிய அமைச்சர் கோட்டாபய தேர்தலில் இருந்து விலகினால் அது சஜித் பிரேமதாசவுக்கு பெரும் வெற்றியாக அமையும் என கூறினார்.

இதன் போது ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணையுமா எனவும் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எவருடனும் பயணிக்க விரும்புவதாகவும் அவர் எந்த தூத்துக்குடியில் இருந்து வந்தாலும் பரவாயில்லை என கூறினார்.

சஜித் பிரேமதாசவை வெற்றிபெற வைத்தாலே ஐ.தே.கவுக்கு எதிர்காலம் உண்டு என தெரிவித்த அவர் எந்த சட்டத்திலும் அவருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச அன்னம் சின்னத்தில் பலருடைய ஆசிர்வாதத்துடனேயே களமிறங்கியுள்ளதாக தெரிவித்த அவர் எதிர்வரும் நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியும் தம்முடன் இணைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்

Share this post:

Recent Posts