தமிழ் සිංහල English
Breaking News

தனிப்பட்ட பிரச்சினையை இனப்பிரச்சினையாக மாற்ற ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் முயற்சி .!

மாத்தறையில் சிங்கள – முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை முற்றியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் இந்த மோதல் சம்பவம்  இடப்பெறுவதற்கு முன்னர்   முஸ்லிம் இளைஞர்கள் சஜித்துக்கு ஆதரவாக பட்டாசி கொளுத்தி ஆரவாரம் செய்து ஆர்வர்ப்பாக  நடந்து கொண்ட கசப்பான சம்பவங்களும், மதுபானங்களை குடித்து விட்டு வெற்று மதுபான போத்தல்கள் அங்குள்ள விகாரை வளவுக்குள் வீசப்பட்டதை அடுத்து விசாரிக்க  சென்ற வேளை சிங்கள இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய வேளை இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே கைகலப்பாக மாறி இனக்கலவரமாக மாறியுள்ளது  . இக்கலவரத்துக்கு  காரணமாக செயற்பட்ட  முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஊரை விட்டு   தப்பியோடியுள்ளார்.

தனிப்பட்ட  கருத்து முரண்பாடே கைகலப்பாக மாறி இனக்கலவரமாக மாறியுள்ளது  .

கிரிந்த புஹுல்வெல்ல பகுதி ஸ்ரீலங்கா பொதுஜனவின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சனா விஜய சேகர் மற்றும் சிங்கள – முஸ்லிம் பெரியோர் அவ்விடத்துக்கு சென்று நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து  அமைதி நடவடிக்கைகளை எடுத்தபடியால் நிலைமை சுமுகமாகியுள்ளது.

இக்கலவரத்துக்கு  ஸ்ரீலங்கா பொதுஜனவின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சனா விஜய சேகர்  தான் காரணம் எனக்கூறி ‘ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் இச்சிறிய சம்பவத்தை பெரிதுபடுத்தி பெரிய கலவரமாக மாற்றி முஸ்லிம் களை ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் திசைதிருப்பும் விடயத்தில் களம் இறங்கி இருப்பதாக பேசப்படுகின்றது .

இதனையடுத்து அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 15 முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிய வருகிறது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Share this post:

Recent Posts