தமிழ் සිංහල English
Breaking News

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் உரிமை எமக்கும் உண்டு – மனோ!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு தமக்கும் உரிமையுண்டு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நீர்கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யும் பொறுப்பை, ‘நாகரிகமாக’ ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

மேலும் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் தாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ , வேட்பாளர் தெரிவிலும் எமக்கு பங்கு வேண்டும் என கூறினார்.

மேலும் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டு, அது தமக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் அதனை ஆராய்ந்து முடிவெடுப்போம் எனவும் கூறினார்.

Share this post:

Recent Posts