தமிழ் සිංහල English
Breaking News

மைத்ரி – ரணில் புதிய கூத்து ! பாராளுமன்றத்தில் விமல் சாட்டை.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று கூறி இன்று அமைச்சரவை கூட்டம் ஒன்றை மைத்திரியும் ரணிலும் கூட்டுகின்றனர். இதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு பாராளுமன்றத்தில் கிடைக்க நாங்கள் விடமாட்டோம்”

இவ்வாறு சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார் விமல் வீரவன்ச எம் பி . அவர் மேலும் கூறியதாவது,

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் மைத்திரியும் ரணிலும் புதிய கூத்தை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெல்லுவார் என்று தெரிந்து இந்த செயற்பாடு நடக்கிறது.

ஜனாதிபதிக்கு நித்திரை வராவிட்டால் நித்திரைக்கான மாத்திரை போட்டு தூங்க வேண்டும். ரணில் கட்சிக்குள் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார். அதை சமாளிக்க இதில் அவர் ஈடுபடுகிறார்.மொத்தத்தில் அரசியலமைப்பை மீறும் செயற்பாடுகளில் ஈடுபட இருவரும் முயல்கின்றனர். தேர்தலை ஒத்திவைக்கவா பாராளுமன்றம் இருக்கிறது?

யாரை போட்டாலும் நாங்கள் வெல்வோம் என்று கருதி இப்போது எமக்குள்ள ஆதரவை கண்டு பயந்து தேர்தலை பிற்போட முயல்கின்றனர். மக்கள் இன்று தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதிய அரசியலமைப்புக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்க நாம் இடமளிக்க மாட்டோம்.தனது பதவிக்காலத்தில் இறுதியிலாவது மக்களிடம் அவப்பெயர் வாங்காமல் செல்ல மைத்ரி முயல வேண்டும்.- என்றார் விமல்

Share this post:

Recent Posts