தமிழ் සිංහල English
Breaking News

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் கரு.!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகள் அடுத்தவாரம் 25 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவா? சஜித் பிரேமதாசவா? கரு ஜயசூரியவா? என்பது குறித்து

தீர்மானிக்கப்படவுள்ளதாக கட்சி தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர் பெரும்பாலும் கட்சியின் மத்திய செயற்குழுவின் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

இருப்பினும், சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் மத்திய செயற்குழுவின் விருப்பத்துடன், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பமும் பெறப்பட வேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.
கட்சியின் வேட்பாளர் தொடர்பில் பிரேரணையை தயார் செய்வதற்கு ரணில் – சஜித் அணியிலிருந்து இரண்டு பேர் வீதம் நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் சிபாரிசும் வேட்பாளர் தெரிவின் போது கருத்தில் கொள்ளப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Share this post:

Recent Posts