தமிழ் සිංහල English
Breaking News

காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள தலைவர்கள் 18 மாதங்களுக்குள் விடுதலை.!

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் 18 மாதங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் 370 சட்டப்பிரிவு கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து பதற்றமான சூழல் ஏற்படுவதை தவிர்க்க காஷ்மீர் முழுவதும் இணையதள சேவை, மொபைல் சேவை முடக்கம், 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

தற்போது காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியதை அடுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. இருந்தும் அரசியல் தலைவர்களின் வீட்டுக்காவல் தொடர்ந்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 18 மாதங்களுக்குள் காஷ்மீர் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் போன்று அனைத்து விதிகளும் நடைமுறைபடுத்தப்பட்டு, பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தெரியாமல் இருந்த நிலையில், மத்திய அமைச்சர் முதல் முறையாக இதுபற்றி பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts