தமிழ் සිංහල English
Breaking News

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முகாமையாளர்.!

மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 51 வயதுடைய தனியார் காப்புறுதி கம்பனி ஒன்றின் முகாமையாளர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற தீதவான் ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார் .

மட்டு – திருகோணமலை வீதியிலுள் உள்ள ஒரு தனியார் காப்புறுதி கம்பனியில் களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதும் 8 மாதங்களும் உடைய சிறுமி ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுமியை அந்த கம்பனியின் முகாமையாளர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து கற்பம் தரித்த சிறுமி கடமையில் இருந்து விலகி வீட்டில் இருந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டு போதனா வைத்தியசாலையில் சிறுமிக்கு குழந்தை ஒன்றை பிறந்துள்ளது

இந்தநிலையில் சிறுமி தான் கர்ப்பமாக காரணம் குறித்த முகாமையாளர் எனவும் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய கம்பனி முகாமையாளரை பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் அன்றைய தினம் மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Share this post:

Recent Posts