தமிழ் සිංහල English
Breaking News

ரூபவாஹினியை கைப்பற்றிய மைத்திரிக்கு ருவன் காட்டமான கடிதம்.!

சிறிலங்கா அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ், கொண்டு வந்திருப்பதற்கு, பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

போர் உச்சநிலையில் இருந்த போது கூட, ரூபவாஹினி  பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கவில்லை என்று  சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

கடுமையான சொற்களுடன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில்,  ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் அரசிதழ் அறிவிப்பை வெளியிட முன்னர், தன்னுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் இந்த நடவடிக்கை,  ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this post:

Recent Posts