தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதியின் தீர்மானம் சுதந்திர ஊடக உரிமையை பாதிக்கும் செயல் .!

 ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனாதிபதி தன்  அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என்பதால் அதனை  சுதந்திர ஊடக கண்காணிப்பு மையம்  மிகவும் வருத்தமடைகின்றது.  .

ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதை சுதந்திர ஊடக கண்காணிப்பு மையம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விசேடமாக தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் சந்தர்ப்பமொன்றில், இவ்வாறான செயற்பாடு நிலைமையை மிக மோசமாக்கும். அதேபோன்று, அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கான அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துவதில்லை என உறுதிமொழியளித்து பதவியேற்ற நல்லாட்சி ஜனாதிபதியொருவரின் கீழ் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பது கவலை அளிக்கின்றது .

அரசியலமைப்பின் பிரகாரம் வேண்டியதோர் விடயத்தை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக விளங்கும் இந்த தீர்மானம், தற்போதைய அரசியல் சூழ்நிலையோடு வைத்து நோக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், வெகுசன ஊடகங்கள் சமூகப் பொறுப்புமிக்க விதத்தில் செயற்படுவதை உறுதி செய்வது தேர்தல் ஆணையாளருக்கு உள்ள விசேட பொறுப்பாகும் .

எந்தவொரு தேர்தலும் நீதி மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றாக அமைவது வாக்காளர்களுக்கு சுயாதீனமாக தீர்மானமொன்று மேற்கொள்வதற்குத் தேவையான தகவல்கள் பக்கச்சார்பின்றி வழங்க வேண்டும் என்பதே சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் நிலைப்பாடாகும்.

ஜனாதிபதியவர்கள் இத்தருணத்தில் எடுத்த  தீர்மானம் சுதந்திர ஊடக உரிமையை மீறுவதாக அமைகின்றது. அதன் காரணமாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்து, நீதி மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றை நடத்துவதற்கு உறுதியளிக்குமாறும் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கின்றது.

Share this post:

Recent Posts