தமிழ் සිංහල English
Breaking News

சூட்சுமமாக இயங்கி வந்த விபச்சார விடுதி!

நீர்கொழும்பு – ஏத்துக்கால் பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் உஸ்பேகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைதாகியுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிக சூட்சுமமான முறையில் விபச்சார பெண்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை பல பகுதிகளுக்கு அனுப்பி விபச்சாரத்தில் ஈடுப்படுத்துவதாக பேலியகொட மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய நேற்று (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் குற்றிப் பிரிவினர் மேற்கொண்டெ சோதனை நடவடிக்கைகளின் போது பெண்களை குறித்த இடத்திற்கு அழைத்து வந்து தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் எனும் சந்தேகத்தில் உஸ்பேகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரஹகஸ்தொட்ட, குருநாகல், பாலியகொட மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 – 42 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Share this post:

Recent Posts