தமிழ் සිංහල English
Breaking News

“கௌரவக் கொலை” சந்தேகநபரை கண்டுபிடிக்க கனடா அரசாங்கம் முயற்சி!

“கௌரவக் கொலை” என்று அழைக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நாட்டிற்குள் நுழைந்தாரா என்பதைக் கண்டுபிடிக்க கனடா அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

இஹாப் கிரயேப் என்பவர் அவரது சகோதரி இஸ்ரா கிரயேப்பின் வன்முறையான மரணம் தொடர்பான குற்றவாளிகளில் ஒருவராக மத்திய கிழக்கு முழுவதிலும் வௌியான செய்திகளில் பெயரிடப்பட்டார்.

மேற்குக் கரையில் சினத்தை ஏற்படுத்தியது மாத்திரமன்றி, ஆர்ப்பாட்டங்களையும் தூண்டிய ஒரு கொலைச் சம்பவமாக இது கருதப்படுகின்றது.

அந்த செய்தி அறிக்கைகள் பலவும் இஹாப் க்ராயெப் ஒரு கனேடிய குடியுரிமை பெற்றவர் என்றும், கொலைக்குப் பின்னர் அவர் கனடா திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், இஹாப் கிரயேப் முன்னர் கனடாவில் இருந்ததற்கான ஆதாரங்களை கனேடிய அதிகாரிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் அவருக்கு கனேடிய தொடர்புகள் இல்லை என்றும் பாலஸ்தீனிய அதிகார பொலிஸ் துறையின் லுவாய் ரெய்கட் என்பவர் தெரிவத்துள்ளார்.

அத்துடன் கிரேக்கத்துடனேயே இஹாப்புக்கு தொடர்புகள் இருப்பதாக அந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார். இந்தநிலையில், இஸ்ரா கிரயேப் கடந்த மாதம் 22 ஆம் திகதி குடும்பத்தினரின் தொடர் தாக்குதலின் பின்னர் உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட ஒரு காணொளியால் குடும்பத்தினர் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதில் குறித்த பெண், திருமணத்திற்கு முன்னதாக தனது வருங்கால வாழ்க்கை துணையை சந்தித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts