தமிழ் සිංහල English
Breaking News

ஐதேகவை அழித்து விட்டார் பிரபாகரன்-.!

25 ஆண்டுகளாக ஒரு அதிபரை உருவாக்க முடியாதளவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அழித்து விட்டார் என்று  அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலவில் நேற்று மாலை நடந்த, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஐதேகவைத் தாக்கினால், நாட்டின் பொருளாதாரம் முடங்கி விடும் என்று பிரபாகரன் அறிந்திருந்தார்.

போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர், கட்சிக்காக உயிரைத் தியாகம் செய்த தலைவரைப் போன்ற ஒரு தலைவரை, நியமிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

2019இல் அதிபராகத் தெரிவு செய்யப்படும் சஜித் பிரேமதாசவின் இலக்கு, நாட்டை அபிவிருத்தி செய்வதாகவே இருக்கும்.

பிரபாகரனாலோ கடவுளாலோ அதனை தடுக்க முடியாது.” என்றும் அவர் கூறினார்.

Share this post:

Recent Posts