வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக, 20இற்கும் அதிகமான அரசியல் கட்சிகள், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.

அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள், வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முன்னர், தமக்கு அறியத் தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே, 20இற்கும் அதிகமான அரசியல் கட்சிகள், தாம் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

இந்தநிலையில், அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வரும் 9 ஆம் நாள் கூடி ஆராயவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்படும்.