தமிழ் සිංහල English
Breaking News

பாகிஸ்தான் காவல்துறையில் முதல் முறையாக இந்து பெண் தெரிவு!!

பாகிஸ்தானை சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதன்முறையாக காவல்துறை துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து பெண் புஷ்பா கோலி. இவர் சிந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித்தேர்வுகளில்

வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சிந்து மாகாணத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தகவலை மனித உரிமைகள் ஆர்வலர் கபில் தேவ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். “சிந்து அரசுப் பணியாளர்

தேர்வாணையம் மூலம் மாகாண போட்டித் தேர்வில் புஷ்பா கோலி தகுதி பெற்று சிந்து மாகாண காவல்துறையில் உதவி துணை ஆய்வாளராக  தேர்வாகியுள்ளார். சிந்து மாகாணத்தில் போலீஸ் பணியில் சேரும் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை புஷ்பா கோலி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்” என டுவீட் செய்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த சுமன் பவன் போடானி என்பவர் சிவில் மற்றும் நீதித்துறை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் மொத்தம் 90 லட்சம் இந்துக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts