தமிழ் සිංහල English
Breaking News

தேசம் என்று அழைப்பதற்கான தகுதி தமிழர்களுக்கு இருப்பதாகத் தான் கருதவில்லை.!

தேசம் என்று அழைப்பதற்கான தகுதி தமிழர்களுக்கு இருப்பதாகத் தான் கருதவில்லை என்று இந்திய இராசதந்திரி ஒருவரிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் தன்னை சந்தித்த இந்திய இராசதந்திரி ஒருவரிடமே இவ்வாறு சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

‘தேசம், தேசம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமே கூறி வருகின்றார். கஜேந்திரகுமார் செய்வது புலிகளின் அரசியல். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட தேசம் என்ற கோட்பாட்டைக் கைவிட்டு விட்டது. தேசம் என்று தம்மைத் தமிழர்கள் தம்மைக் கருதுவது இந்தியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியும். இதனால் தான் எனது கட்சிக்கு கூட தமிழ் மக்கள் கூட்டணி என்று பெயர் வைத்துள்ளேன். தமிழ் மக்கள் பேரவைக்கு கூட ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் பேரவை என்று தான் பெயர் வைத்தார்கள். நான் தான் அதைத் தடுத்து நிறுத்தினேன். தமிழர்கள் ஒரு தேசம் என்று நான் நம்பவில்லை.’

இவ்வாறு தன்னை சந்தித்த இந்திய இராசதந்திரியிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதாக புதுடில்லியில் உள்ள இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் மையமான சவுத் புளொக்கிற்கு (South Block) நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் சங்கதி-24 இணையத்திற்கு அறியத் தந்துள்ளார்.

Share this post:

Recent Posts