தமிழ் සිංහල English
Breaking News

வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்.!

அர்ப்பணிப்புடன் செயற்பட்டால், வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும் என ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்தபோது அது சாத்தியமானது என எவரும் தெரிவிக்கவில்லை.

எனினும், அதில் தங்களுக்கு நம்பிக்கை இருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த திட்டத்தை வகுத்து அதில் வெற்றியையும் பெற்றுக்கொண்டோம்.

இதேவேளை, தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது இயலாத விடயம் என்கின்றபோது, அதனையும் தங்களால் மாற்றியமைக்க முடியும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய் திணைக்களத்தினர் விசாரணைகள் முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மாறாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் 2015 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ளதா என ஆராய 20 குழுக்கள் வரை ஹம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர் எப்போது கடவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரும் ஆராய்கின்றனர்.

எனவே, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்வதிலும் பார்க்க இதுவே முதன்மை பெற்றிருக்கிறது என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Share this post:

Recent Posts