தமிழ் සිංහල English
Breaking News

பிரித்தானியா பெரும் நெருக்கடியில் .!

பிரித்தானியாவின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆளும் அரசு பெரும் நெருக்கடியில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது. இதுதொடர்பாக பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை வாக்குடுப்பு நடைபெற்றது.

அதில் தொடர் தோல்வியை பெற்றதால் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரசா மே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

அவரை தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நிலையில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிலிப் லீ, லிபரல் டெமக்கிராட்சு கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு பெரிய சிந்தனைக்குப் பிறகு, கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினராக எனது அங்கத்தினர்களுக்கும் நாட்டின் சிறந்த நலன்களுக்கும் இனி சேவை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பிரதமருக்கு எனது கடிதம்:

View image on Twitter

Share this post:

Recent Posts