தமிழ் සිංහල English
Breaking News

நியூஸிலாந்து அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் செட் ரேன்ஸ் 3 விக்கெட்களையும் டிம் சௌதி மற்றும் ஸ்கெட் குக்லைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் நியூஸிலாந்து அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts